மன்னார்குடியில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் வணிக நிறுவனங்களில் ஆய்வு
உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை.;
மன்னார்குடி நகர்ப்புற கடைகளில் ஆய்வு மேற்கொள்ளும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முருகேசன், கர்ணன் ஆகியோர் மன்னார்குடி நகரபகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகள் , டீக்கடைகள் , பெட்டிகடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட நிக்கோட்டின் கலந்த புகையிலை பொருட்களான பான்பராக், ஹான்ஸ் போன்ற தடைசெய்யபட்ட பொருட்கள் உள்ளாதா எனவும் மேலும், உணவு பாதுகாப்பு துறையின் பதிவு மற்றும் உரிமம் இல்லாத கடைகளுக்கு ஏழு நாட்கள் கால அவகாசம் அளித்து மேற்கண்ட சான்றிதழ்கள் பெற அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு உரிமம் பெறாத கடைகள் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கபடும் என வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.