கர்நாடக அரசை கண்டித்து நீடாமங்கலத்தில் விவசாயசங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணைக் கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் வரும் காவிரியை தடுத்து குடிநீர் மற்றும் பாசனமின்றி தமிழகத்தை பாலைவனமாக்க சட்டவிதிகளுக்கு புறம்பாக மேக்கேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு ரூ ஆயிரம் கோடி நிதி ஒதிக்கீடு செய்த கர்நாடக மாநில அரசை கண்டித்தும் மத்திய மாநில அரசு தடுத்திட வலியுறுத்தி இன்று காவிரி டெல்டா மாவட்டம் முழுவதும் விவசாய சங்கத்தினர் சார்பில் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒருபகுதியான திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் பெரியார் சிலை முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மேகதாட் அணையை கட்ட ஆயிரம் கோடி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்தும் , ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கண்டன முழுக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பேசிய விவசாய சங்கத்தினர் ஓன்றிய அரசு கர்நாடகவில் மேக்கேதாட்டு அணையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் பேராட்டத்தில் ஈடுபட போவதாக ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்