மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ எக்ஸ்ரே பிரிவு துவக்கம்
மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக பல் எக்ஸ்ரே பிரிவு துவக்கப்பட்டது/
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், டயாலிசிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புதிதாக பல் மருத்துவ பிரிவுக்கு எக்ஸ்ரே இயந்திரம் தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் புதிதாக வாங்கப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய பல் எக்ஸ்-ரே பிரிவு துவக்க நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பல் மருத்துவர் அசோகன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள்,மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.அவர்களுக்கு இந்த இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.