மன்னார்குடி அருகே இறந்தவரின் உடலை வாய்க்கால் வழியாக தூக்கி செல்லும் நிலை
மன்னார்குடி அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு வாய்க்கால் தண்ணீர் வழியாக எடுத்து செல்லவேண்டிய நிலை உள்ளது.;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரவத்தூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் யாரேனும் உயிரிழந்தால் உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல வழியின்றி சுமார் 40 ஆண்டு காலத்திற்கு மேலாக ஆற்றில் இறங்கிதான் இறந்தவர்களின்உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர் .
கோடை காலத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் சிரமம் தெரிவதில்லை. இந்நிலையில் அரவத்தூர் கிராமத்தில் திடீரென தினச்செல்வி என்ற பெண் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இறுதி சடங்கிற்கு சடலத்தை எடுத்து செல்ல வழியின்றி மக்கள் வாய்க்கால்களில் , நடவு வயல்களிலும் கடந்து செல்லும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது.
இறந்தவரின் இறுதி சடங்கு கூட முறையாக செய்யமுடியாத சூழ்நிலை இப்பகுதி மக்களுக்குஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியில் உள்ளவர் கூறுகையில் மேட்டூர் அணை திறந்து தண்ணீர் வந்து விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். மழைக் காலங்களிலும் இப்பகுதியில் யாரும் இறந்துவிட்டால் அவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுடுகாட்டிற்குசெல்ல சாலை வசதி அமைத்து தரவேண்டி பல்வேறு கோரிக்கை வைத்தும் இதுவரையிலும்
அரசு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. ஆற்றில் இறங்கிதான் கரையேற வேண்டியுள்ளது.சுமார் 40 ஆண்டுகாலமாக அனுபவித்து வரும் சிரமத்தை போக்கும் வகையில் பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் அதை போல் புதியசாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.