ஊரடங்கு விதியை மீறி கடைகளுக்கு பூட்டி சீல்

ஊரடங்கு உத்தரவை மீறி திறக்கப்பட்ட கடைகளை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Update: 2021-05-15 01:45 GMT

தமிழகத்தில் குரோனா பெருந்துறை கட்டுப்படுத்த மாநில அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கி பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி பகுதியில் நாள்தோறும் அதிகாரிகள் கடை வீதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு கடைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

காவல் துணை கண்காணிப்பாளர் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று முன்தினம் கடைவீதிகளில் ஆய்வு செய்து அனுமதி இன்றி திறக்கப்பட்ட கடைகளை மூடுமாறு எச்சரித்தனர் திறக்கப்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர் நிலையில் இன்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது திறக்கப் பட்டிருந்த நகைக்கடை அடகு கடை உள்ளிட்டவற்றை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News