மன்னார்குடியில் விவசாயிகளின் பயிர் காப்பீட்டு தொகை ரூ. 60 லட்சம் மோசடி

மன்னார்குடியில் விவசாயிகளின் பயிர் காப்பீடு தொகை ரூ. 60 லட்சம் மோசடி நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-02-16 11:55 GMT

மன்னார்குடியில் நடந்த பயர் காப்பீடு தொகை தொடர்பாக விவசாயிகள் புகார் அளிக்க வந்தனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது . இந்த சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு கடந்த 2020 -21 ஆம் ஆண்டிற்கு பயிர்காப்பீடு வழங்கப்பட்டது. இதில் தேவதானம் கிராமத்தில் குடியிருப்பு இல்லாமலும் கிராம எல்லைக்குள் சாகுபடி நிலங்கள் இல்லாமலும் பல போலியான பெயர்களில் போலி ஆவணங்களை வைத்து பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வருவாய் கிராமத்திற்கு அப்பாற்பட்ட மன்னார்குடி மழவராயநல்லூர் , தென்பரை கிராமத்தில் உள்ள சர்வே எண்ணை பயன்படுத்தி தேவதானம் கிராமத்தில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களின் பெயர்களை வைத்து கிராம நிர்வாக அலுவலர் மீனாட்சி போலி சிட்டாக்கள் வழங்கியதில் சுமார் ரூ 60 இலட்சத்திற்கு மேல் பயிர் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் மோசடி நடந்துள்ளது.

தொடக்க வேளாண்மை அ.தி.மு.க.வை சேர்ந்த கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்பிரமணியன் தனது உறவினர்கள் , மற்றும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பெயர்களில் பயிர் காப்பீட்டு தொகையை முறைகேடு செய்துள்ளதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் அளித்தும் இதுவரையில் விவசாயிகள் பணம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை .

மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு மனுக்கொடுத்த விவசாயிகள் பணத்தை எடுத்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் விவசாயிகளை குடும்பத்துடன் ஒன்று திரட்டி விரைவில் சாலை மறியலில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர் .

Tags:    

Similar News