15 நாள் தொடர்மழையால் திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீத பயிர்கள் பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் 15 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் 70 சதவீத பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

Update: 2021-12-01 13:53 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 15 நாள் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை காட்டும் விவசாயிகள்.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பகுதியான திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம்.இம்மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 2,70,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் இருந்து திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வந்ததையடுத்து கடைசிகட்ட அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின. இதுதவிர குறுவையை தொடர்ந்து தாளடி நெற்பயிர்களும், சம்பா பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளப்பட்ட இளம் நடவுபயிர்களும் மழையால் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகின.நடவு செய்யப்பட்ட பயிர்களில் சுமார் 70சதவதீத்திற்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் பயிர்கள் அழுகியதால் பயன்படுத்தமுடியாத நிலை எழுந்துள்ளது. இதுதவிர வயல்களில் பயிர்களை சூழ்ந்திருந்த தண்ணீர் வடிந்தபோதிலும் பயிர்கள் தற்போது குருத்து பூச்சி , தோவை பூச்சி, இலை கருகல் நோய், உள்ளிட்ட பல்வேறு பூச்சி தாக்குதலுக்கு பயிர்கள் உள்ளாகி வருகிறது.

தற்போது உள்ளசூழ்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையினால் பயிர் சாகுபடி இழப்புக்கு உள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு மறுசாகுபடிபணிக்காக வழங்கப்படும் நிவாரணம் எந்த விதத்திலும் பயன் அளிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒன்றிய அரசின் மழை வெள்ள பாதிப்புகளை பெயரளவிற்கு கணக்கெடுப்பு செய்த குழு அறிக்கை குறித்த விவரமும் இதுவரை தெரியவராத நிலையில்விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இப்போதைள சூழ்நிலையில் விவசாயிகளை காப்பாற்றிட மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியினை போர்க்கால அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும், மேலும் மாநில அரசு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 வரை நிவாரணம் அளித்தால் மட்டுமே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஓரளவிற்கு பாதுகாக்க முடியும் என மத்திய, மாநில அரசுகளுக்கு விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News