கூத்தாநல்லூரில் கூட்டுறவு மருந்தகம்: அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்
கூத்தாநல்லூரில் கூட்டுறவு மருந்தகத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை துவங்கி வைத்தார்/;
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், காமதேனு உள்ளிட்ட பெயரில் மருந்தகங்களையும், அம்மா மருந்தகங்களையும் நடத்தி வருகின்றது .இதில்20 சதவீத தள்ளுபடியில் மருந்து, மாத்திரைகள் விற்கப்படுகின்றன. இதனால் ஏழை , எளியமக்கள் கூட்டுறவு மருந்தகங்களில் மருந்துகளை வாங்க முன்னுரிமை தருகின்றனர்.
தற்போதுசெயல்பாட்டில் பெரும்பாலான கூட்டுறவு மருந்தகங்கள், சென்னை போன்ற முக்கிய நகரங்களில் உள்ளன .இந்நிலையில் கிராம மக்களும் பயன்பெறும் வகையில், கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளான , திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கூட்டுறவு மருந்தகத்தை உணவுத்துறைஅமைச்சர் சக்கரபாணி குத்துவிளக்கேற்றி திறந்து முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயதிரி கிருஷ்ணன் ,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன், கூட்டுறவுசங்க மாவட்ட இணைபதிவாளர் சித்ரா , சரக துணைபதிவாளர் ராமசுப்பு, கூட்டுறவு ஒன்றியமேலாண்மை இயக்குனர் செளந்தராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .