கடித்த பாம்பை உயிருடன் எடுத்துச்சென்ற குடிமகன்: பதறியடித்து வெளியேறிய மருத்துவர்
மன்னார்குடியில் தன்னை கடித்த பாம்புடன் வந்த ஒருவரால் மருத்துமனையில் பரபரப்பு ஏற்பட்டது.;
திருவாருர் மாவட்டம், மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில் வசித்து வருபவர் தர்மன் (38). இவர் எலக்ட்ரிக்கல் கூலி வேலை பார்த்து வருகிறார் . இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் பாம்பு உள்ளதாக தர்மனிடம் கூறியதாகவும், அந்த வீட்டிற்கு பாம்பு பிடிப்பதற்காக மது போதையில் சென்ற தர்மனை சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு தீண்டியது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எலக்ட்ரிக்கல் வேலை பார்க்கும் கூலி தொழிலாளி தர்மன் தன்னை கடித்த பாம்பை லாவகமாக பிடித்து கடவுள் பரமசிவனாக மாறி பாம்பை எடுத்துக்கொண்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பாம்புடன் வந்த அவரை கண்டு நோயாளிகள் நாலாபுரமும் சிதறி ஒட, அவர் மட்டும் அமைதியாக டாக்டர் அறையை நோக்கி நகர்ந்து சாரை பாம்பை மருத்துவர் முகத்தில் காண்பித்துள்ளார். இந்த பாம்பு என்னை கடித்துவிட்டது ஊசி போடுங்கள் என கதற, மருத்துவர் பதறியடித்து வெளியேற இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் வீடு திரும்பிய தர்மன் அந்த பகுதியில் பாம்பை கையில் பிடித்துக்கொண்டு விளையாடிய சம்பவத்தை அருகில் இருந்தவர்கள் பார்த்து ரசித்தனர் .