மன்னார்குடி தலைமை மருத்துவமனையில் மத்திய மருத்துவ குழுவினர் ஆய்வு

சிறப்பு மத்திய மருத்துவ குழுவினர் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வில் ஈடுபட்டனர்.

Update: 2021-11-25 05:14 GMT

தேசிய தர நிர்ணய ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் 3 பேர் அடங்கிய சிறப்பு மருத்துவ மத்திய குழு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை இயங்கி வருகிறது. மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவப் பிரிவு, குழந்தைகள் நலத்துறை, எலும்பு முறிவு பிரிவு, கண் மருத்துவப்பிரிவு, பொது மருத்துவம் மற்றும் நவீன அறுவை சிகிச்சை பிரிவு, செவித்திறன் பரிசோதனை நிலையம் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் சிடி ஸ்கேன் வசதி, டிஜிட்டல் எக்ஸ்ரே, ரத்த வங்கி, நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் ஆக்ஜிஜன் உற்பத்தி செய்யும் ஆலை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.

இந்தநிலையில், மத்திய அரசின்பொது சுகாதாரதுறை கீழ் டெல்லியில் இயங்கும் தேசிய தர நிர்ணய ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு மருத்துவக்குழு அரியானாவை சேர்ந்த மருத்துவர் நீரஜ்யாதவ், கேரளாவை சேர்ந்த மருத்துவர் நாராயண்பாய், உத்திரபிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் நாஜியா சபின் ஆகியோர் அடங்கிய சிறப்பு மருத்துவ மத்திய குழு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்து அங்குதுறை வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்களுக்கு மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் நவீன வசதிகள் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் விஜயகுமாரிடம் மத்தியக்குழுவினர் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News