வேளாண் சட்டங்கள் ரத்து: மன்னார்குடியில் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மோடிக்கு ஏற்பட்ட தோல்வியே வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற்றார் என மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் பேட்டி.;
விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டம் ரத்து செய்யும் வரை டெல்லியில் தொடர்ந்து பஞ்சாப் ஹரியான, மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு நிலங்களை சேர்ந்த விவசாயிகள் மழை, பணி காலம் என பார்க்காமல் டெல்லியில் போராடி வந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி மூன்று வேளாண் சட்டம் ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, வடபாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது : மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்த நிலையில் விவசாயிகள், இன்று பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். பாராளுமன்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தீர்மானம் நிறைவேற்றி, சட்டமாக்கும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும். இந்த மாபெரும் வெற்றி என்பது ஒட்டுமொத்த இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என தெரிவித்தார்.