திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடி தொடக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடி பணியை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;

Update: 2021-09-24 11:00 GMT

திருவாரூர் மாவட்டத்தில் கருப்பு கவுணி நெல் சாகுபடியை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

150-நாட்களில் அதிக விளைச்சல் தரும் கருப்பு கவுணி அரிசி ரகங்கள் சர்க்கரை நோயை கட்டுபபடுத்தும் தன்மை கொண்டதாக உள்ளது.  பரம்பரிய அரிசியின் நன்மைகள் குறித்தும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக தற்போது பாரம்பரிய நெல் ரகங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரிஷியூர் எம்.ஆர்.கே.எம் இயற்கை வேளாண்மையம் மற்றும் ஆதிரெங்கம்  நெல் ஜெயராமனின் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், இணைந்து நடத்திய இயற்கை பாரம்பரிய நடவு திருவிழா 2021 ரிஷியூர் கிராமத்தில் நடந்தது.  இதில் செந்தில் என்பவரது நிலத்தில் 5 ஏக்கரில் கருப்பு கவுணி நெல் நடவு பணியை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

இதில் பொன்னையா ராமஜெயம் வேளாண் கல்லூரி மாணவிகள் மற்றும் இயற்கை விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News