பாம்புக்கடி குறித்து மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார்குடி அருகே அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாம்புக்கடி தவிர்ப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2022-04-12 12:26 GMT

பாம்புக்கடி குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பாம்பு கடியால் அதிகமாக ஏழை எளிய கிராமப்புற மக்களே இறக்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சமூக மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்திக்கிறது .

பாம்பு கடி உயிரிழப்புகளை குறைக்க திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் பாம்புக்கடி தவிர்ப்பு மற்றும் பாம்புகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடகோபனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் பாம்புக்கடி தவிர்ப்பு மற்றும் பாம்புகள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவியர்கள் மற்றும் கிராம மக்களுக்கு காணொளி காட்சி மூலம் விளக்கப்பட்டு பாம்புக்கடி தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் மீனாட்சி சூர்யபிரகாஷ் , ஒன்றிய செயலாளர் ஐவி.குமரேசன் , அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்   

Tags:    

Similar News