மத்திய அரசை கண்டித்து ஆட்டோ தொழிற்சங்கத்தினர் போராட்ட அறிவிப்பு

மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது என திருவாரூரில் நடந்த ஆட்டோ தொழிற்சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-02-16 12:04 GMT

திருவாரூரில் ஆட்டோ தொழிற்சங்க மாநாடு நடந்தது.

திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் 15வது மாவட்ட மாநாடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தனியார் திருமணமண்டபத்தில் மாவட்டசெயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்றது.

ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் மாநில பொதுச்செயலாளர் சிவாஜி முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஆட்டோ தொழிற்சங்க புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநாட்டில் நாட்டின் பொதுத்துறையில் மிகப்பெரிய நிறுவனமான பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி இந்திய பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் எல்.ஐ.சியை சீரழிக்கும் நோக்கோடு தனியார் விற்பனை துவக்க அறிக்கையை வெளியிட்டுள்ள ஒன்றிய மோடி அரசை மாநாடு கண்டிக்கிறது.  இந்த முடிவை ஒன்றிய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும் , திருவாரூர் மாவட்டத்தில் தேசிய , மாநில மாவட்ட உள்ளாட்சி சாலைகள் மிகமோசமாக பழுதடைந்து உள்ளது. இந்தமோசமான சாலைகளால் போக்குவரத்து,இரண்டு சக்கர வாகனங்கள் ,தொடர் விபத்துக்குள்ளாகி வருகிறது.

இந்தவிபத்துகளை தடுப்பதற்கு ஒன்றிய மாநில அரசுகள் சாலைகளை சரி செய்ய வேண்டும் , வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் மீனவர்களுக்கு வழங்குவது போல் மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை நிறைவேற்றவில்லையெனில் பிப்ரவரி மாத இறுதிக்குள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News