கோட்டூர் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

கோட்டூர் அருகே அருள்மிகு இராமநாத ஆலய கும்பாபிஷேக விழா தொடக்கமாக முளைப்பாரி மற்றும் யாசாலைக்கான தீர்த்த கடங்கள் சுமந்து கிராம மக்கள் ஊர்வலம்

Update: 2022-03-26 12:00 GMT

கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே ரெகுநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இராமநாத சுவாமி ஆலயம், சுமார்  350 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

பிராத்தனை ஸ்தலமாகவும் விளங்கும் இந்த ஆலயம்  சிதிலம் அடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் ஏராளமான பொருட் செலவில் சீரமைக்கப்பட்டு வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் ஞாயிற்றுகிழமை மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது

கும்பாபிஷேகத்தையொட்டி கிராமத்தின் பாரம்பரிய வழக்கப்படி கிராம மக்கள் நோய் நொடிகள் இல்லா மழை வேண்டியும் விவசாயம் செழித்தோங்கவும் வேண்டியும், அனைவரும் செல்வ செழிப்போடு வாழவேண்டியும் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்தும், யாகசாலை பூஜைக்கான தீர்த்த கடங்களை சுமந்து ஊர்வலமாக வலம்வந்து ஆலயத்தை அடைந்தனர். தொடர்ந்து வேத ஆகமபடி முதல்கால யாகசாலை பூஜையினை சிவாச்சாரியார் தொடங்கினர்.    

Tags:    

Similar News