மன்னார்குடியில் அ.ம.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கூட்டம்
மன்னார்குடியில் அ.ம.மு.க. ஒன்றிய, நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக ஆலோசனைக் கூட்டம் மன்னார்குடியில் மாவட்டக்கழக செயலாளர் எஸ். காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர் மற்றும் மாவட்ட பிற அணி செயலாளர்கள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் எம்.ரெங்கசாமி கலந்துகொண்டு அ.ம.மு.க. வளர்ச்சி பணிகள் மற்றும் வர உள்ள தேர்தல்களில் எவ்வாறு பணியாற்றுவது, உறுப்பினர்கள் சேர்க்கை முதலான பல்வேறு நிலைகளில் கழத்தினருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் கடந்த 6 மாதகால தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை வேண்டுமென்றே தி.மு.க. அரசு புறக்கணித்துவருவதற்கு கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி தலைவரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கு.சீனிவாசன் உள்ளிட்ட அணி மாநில நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.