5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சீல்
5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது-;
கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதி தீவிரமாக பரவி வரும் வேளையில், அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுவரின் எண்ணிக்கையும் கனிசமாக உயர்ந்து வருவகிறது , கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்ததுள்ளது .
அதனடிப்படையில், இன்று முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளுக்கு மட்டும் விலக்கு அளித்து அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டும் திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைகள் மற்றும் நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிக்கின்றார்களா என வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர்
அப்போது தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தெய்வநாயகி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர் தனியார் நிதி நிறுவன மேலாளர்கள் வருவாய் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .