மன்னார்குடி அருகே மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழப்பு
மன்னார்குடி அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த 3 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே தருசுவேலி கிராமத்தைச் சேர்ந்த பாலு, இளையராஜா ஆகியோருக்கு சொந்தமான மூன்று மாடுகளை இன்று காலையில் மேய்ப்பதற்காக அங்குள்ள வயல்வெளிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.
இரவு பெய்த கன மழையினால் அந்த பகுதியில் இருந்த மின்சார கம்பி, இடி தாக்கி அறுந்து கீழே விழுந்து கிடந்துள்ளது. .அங்கு மேய்ந்துக் கொண்டிருந்த 3 பசுமாடுகள் மின்சார கம்பி மீது கால்களை வைத்ததால், மின்சாரம் தாக்கியதில் பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது .இறந்துபோன கறவை மாடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்ச ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது வளர்த்து கறவை பசு மாடுகளை இழந்த விவசாயிகள் மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர்.