மன்னார்குடியில் பேராசிரியர் அன்பழகன் 2-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி
மறைந்த பேராசிரியர் அன்பழகன் நினைவு தினத்தையொட்டி மன்னார்குடியில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.;
தி.மு.க. மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர தி.மு.க. அலுவலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது. அன்பழகன் திருவுருவ படத்திற்கு தி.மு..க பொருளாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு மாலை அணிவித்து மரியாதை செய்தார் .
இதில் நகர செயலாளர் வீரா கணேசன் , நகர்மன்ற தலைவர் மன்னை சோழராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ மாணிக்கம் , தலைமை செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட அரசு வழக்கறிஞர் கலைவாணன் , உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர் .