திருவாரூரில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறப்பு

தமிழகத்தில் முதன்முறையாக கொரானா நோயாளிகள் விரைவில் குணமடைய திருவாரூரில் மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறக்கபட்டது .

Update: 2021-05-14 09:30 GMT

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் 150-க்கும் மேற்ப்பட்டோர் கொரோணா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் பூரண குணமடைய தமிழகத்திலேயே முதன் முதலாக மூலிகை நீராவி சிகிச்சை மையம் திறக்கபட்டுள்ளது.

இதன் மூலம் இன்று முதல் தினமும் இரண்டு முறை நோய்களின் தன்மைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.  நோயாளிகளுக்கு குறைந்த பட்சம் 3 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூலிகை நீராவி பிடிக்க அறிவுறுத்தபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. .

மூலிகை நீராவியில் துளசி, நொச்சி, ஆர்.எஸ்.பதி , வேப்பிலை , ஓமவல்லி , ஆடாதுடை உள்ளிட்ட சித்தா இலைகளை கொண்டு ஒரு நாளைக்கு ஒரு மூலீகை செடியை வெண்ணீரில் நீரவி பிடிக்கபட உள்ளனர் .

இதற்கான சிகிச்சை மையத்தை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையுடன் இணைந்து மன்னார்குடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் சமூக சேவை சங்கமான நேசக்கரம் செயல்படுத்தியது .

Tags:    

Similar News