குருவைசாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்.
மன்னார்குடி மக்கள் வேண்டுகோள் இதுதான்...;
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு விவசாயிகள் பெரும் பங்காற்றியுள்ளனர். வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராகவும் பாஜக , அதிமுக கூட்டணிக்கு எதிராக விவசாயிகள் வாக்களித்து மகத்தான வெற்றிக்கு உதவி உள்ளனர். தமிழகத்தில் வரும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும். அணையில் 98 அடி தண்ணீர் இருப்பு உள்ளது .
எனவே உடனடியாக பாசன வடிகால்கள்,கால்வாய்கள், தூர்வார வேண்டும். கடந்த ஆண்டு தூர் வாரஒதுக்கீடு செய்து நிலுவையில் உள்ள பணிகளைஉடனடியாக துவக்கிட வேண்டும். இன்னும் 40 நாட்களேஉள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கான அடிப்படை பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் . கோடை உழவு செய்வதற்கு வேளாண் பொறியியல் துறை மூலமாக காவிரி டெல்டா விற்கு கூடுதல் டிராக்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். டிஏபி உள்ளிட்ட உரங்களின் விலையை இப்கோ நிறுவனம் உயர்த்தியதாக அறிவித்தது.விவசாயிகள் போராட்டத்தை அடுத்து திரும்பப் பெற பட்டதாக மத்திய அரசு அறிவித்தே தவிர, உண்மையான விலைப்பட்டியல் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை,விலை குறித்து மத்திய மாநில அரசுகள் வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும்.
குறுகிய கால விதைகள் விவசாயிகளுக்கு தேவையான அளவு கிடைப்பதற்கு வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஜனவரி மாதம் பெய்த பெரு மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு100 சதவீத இழப்பீடு தொகையினை தமிழக அரசு அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதை காரணங்காட்டி அத்தொகை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல விவசாயிகளுக்கு முதல்கட்டமாக 12500 கோடி கூட்டுறவுக் கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து தள்ளுபடியான சான்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதற்கான நகைகளை விவசாயிகளிடம் வழங்காமல் கூட்டுறவு நிறுவனங்கள் காலம் கடத்தி வருகிறது.
தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில்,தேர்தல் நடத்தை விதிமுறையை உடனடியாக மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரண தொகையும் நகைகளையும் உடன் வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிமராமத்து திட்டப்பணிகளை தமிழகத்தில் விரைந்து மேற்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டு தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.