சின்னமனூர் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை?
சின்னமனுார் அருகே மனைவி இறந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரிக்கின்றனர்.;
சின்னமனுார் வேப்பம்பட்டி மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார், 29. இவரது மனைவி ஒரு வாரத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தான் அனாதை ஆகி விட்டதாக புலம்பி வந்த ஜெயக்குமார், வேப்பம்பட்டியில் இருந்து எரக்கோட்டைபட்டி செல்லும் ரோட்டோரம் இறந்து கிடந்தார். ஜெயக்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் செய்தனர். சின்னமனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.