உத்தமபாளையம் அருகே தேனீக்கள் கொட்டியதில் வாலிபர் உயிரிழப்பு
உத்தமபாளையம் அருகே தேனீக்கள் கொட்டியதில் பலத்த காயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
உத்தமபாளையம் அருகே டி.சிந்தலைச்சேரியில் பங்காருசாமிபுரம் என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில் ஏழு பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது எங்கிருந்தோ மலைத்தேனீக்கள் கூட்டம் வந்து அத்தனை பேரையும் விரட்டி கொட்டியது. தப்பித்து அனைவரும் ஓடி வந்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் கவாஸ்கர் (37) என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.