தேனி அருகே மது பழக்கத்தை விட முடியாமல் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

தேனி அருகே மது பழக்கத்தை விட முடியாமல் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-05-13 03:17 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம்  பரமத்தேவன்பட்டியை சேர்ந்த சமுத்திரபாண்டியின் மகன் அஜித்பாண்டி,(42). இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதனால் கோபித்துக் கொண்ட அஜித்பாண்டி, தன் உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மதுபழக்கத்தை விட முடியாமல் விஷம் குடித்து அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ராஜதானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News