எஸ்.ஐ.,க்கு விண்ணப்பித்தவர்களுக்கு 5 மையங்களில் நாளை எழுத்து தேர்வு

TNUSRB 2022 Notification - தேனி மாவட்டத்தில் எஸ்.ஐ.,க்கு விண்ணப்பித்த 4522 பேருக்கு எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

Update: 2022-06-24 03:16 GMT

பைல் படம்.

TNUSRB 2022 Notification - தேனி மேரிமாதா மெட்ரிக் பள்ளி, முத்துதேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொடுவிலார்பட்டி கம்மவார் கல்வி வளாகத்தில் 3 மையங்கள் என ஐந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எழுத்து தேர்வு காலை 10 மணி முதல் மாலை 12.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரையும் நடக்கிறது.

இந்த தேர்வில் பாதுகாப்பு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தலைமையில் நடந்தது. கூடுதல் எஸ்.பி., கார்த்திக், டி.எஸ்.பி.,க்கள் சுரேஷ், பால்சுதன், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.தேர்வு மையத்திற்கு தாமதமாக வருபவர்களை அனுமதிக்க கூடாது. நீலம், கருப்பு நிற பேனா மட்டுமே கொண்டு வர வேண்டும் என எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தெரிவித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News