விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் சம்பள பணத்தை மீட்டு தந்த போலீசார்
கம்பம் மெட்டு அருகே விபத்தில் சிக்கிய தொழிலாளர்களின் சம்பள பணத்தை மீட்டு போலீசார் அவர்களிடம் வழங்கினர்.
நேற்று இரவு கேரளாவில் எஸ்டேட்களில் பணி முடித்த தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு கம்பம் வந்த ஜீப், கம்பம் மெட்டு அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை மீட்கும் பணியில் கம்பம் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
போலீசார்கள் வெற்றிச்செல்வம், தர்மராஜா ஆகியோர் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கவிழ்ந்த ஜீப்பிற்குள் ஒரு ஓரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்க கொண்டு வந்திருந்த 30 ஆயிரம் ரூபாய் பணமும் இவர்களிடம் சிக்கியது.
இது தொழிலாளர்களின் சம்பள பணம் என்பதை உணர்ந்த இரண்டு போலீசாரும், உடனே தொழிலாளர்களை வேலைக்கு சென்ற நபரை தொடர்பு கொண்டு இந்த பணத்தை அவரிடம் ஒப்படைத்து, தொழிலாளர்களுக்கு வழங்கினர். போலீசாரின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.