தேனி கலை, அறிவியல் கல்லுாரியில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்
தேனி கலை அறிவியல் கல்லுாரி, கோட்டூர் ஊராட்சி, சவுராஷ்டிரா கலை அறிவியல் கல்லுாரியில் மகளிர் தினவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தேனி அருகே வீரபாண்டியில் தேனி கலை, அறிவியல் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இங்கு மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் கனகராஜ் வரவேற்றார். ஹீரோ ஸ்டார் குழு தலைவர் ராஜதுரை இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு வரும் கீதாசசிக்கு தேனி மாவட்டத்தின் சிங்கப்பெண் விருதினை தமிழகத்தின் முதல் விமானி காவ்யா ரவிக்குமார் வழங்கினார்.
வீரபாண்டி சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களில் நடந்த விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் கலைவாணி ஜவகர்லால் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் சுருதி, தேனி கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் கனகராஜ், பெண் விமானி காவ்யா ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர்கள் அமர்பிரியா மற்றும் பங்கஜம் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோட்டூர் ஊராட்சியில் நடந்த விழாவில் தலைவர் முத்துவேல் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் மாலா காமராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஊராட்சி தலைவரும், ஒன்றிய கவுன்சிலரும் இணைந்து இனிப்புகளை வழங்கினர். ஊராட்சி செயலாளர் ராமு ஏற்பாடுகளை செய்திருந்தார்.