தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் மகளிர் தின விழா
மகளிர் தின விழாவில், தேனியின் சிறந்த மகளிர் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.;
தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் மகளிர் தின விழா நடைபெற்றது. தேனி மகளிர் நல மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர் வனிதாருக்மணி தலைமை வகித்தார். சீனியர் மகளிர் நல டாக்டர் கோமதி முன்னிலை வகித்தார்.
தேனி மாவட்ட மகளிர் நல மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர் சாந்திராணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தேனியில் மகளிர் நல சிகிச்சையில் சிறப்பான பணிபுரிந்து வருகின்ற பெண் மருத்துவர்களுக்கு சிறந்த மருத்துவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் பி. கமலக்கண்ணன் வழங்கினார்.
நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் சிறந்த பெண் ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. தேனி மாவட்ட முதுநிலை மகளிர் நல மருத்துவர்கள் ஜெயலக்ஷ்மி, பூங்கொடி, லோபா சங்கர், கல்பனா ராணி, உமா ஸ்ரீதர், கவிதா, சவுமியா, தங்கலேகா உட்பட பலர் கலந்து கொண்டார்கள். நட்டாத்தி நாடார் மருத்துவமனை மாணவிகள் மற்றும் ஊழியர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை நிர்வாகிகள் செய்து இருந்தார்கள்.