பெரியகுளம்: கணவன் வீட்டின் முன்பு விஷம் குடித்து பெண் பலி

பெரியகுளத்தில், கணவன் வீட்டின் முன்பு பெண் ஒருவர் விஷம் குடித்து பலியானார்.;

Update: 2022-04-11 02:15 GMT

பெரியகுளம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவருக்கும் வினிதா என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மனைவியின் நகை, பணத்தை ப றித்துக் கொண்ட ராஜாமுகமது, வேறு பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

வினிதாவின் மாமியார் தவுலத்பேகமும் மருமகளை திட்டி உள்ளார். மனம் உடைந்த வினிதா கணவன் வீட்டு வாசலில் நின்றவாரே விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். ஜெயமங்கலம் போலீசார் ராஜாமுகமதுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News