சொத்து தகராறில் பெண் வெட்டிக்கொலை: ராணுவவீரர் தலைமறைவு

தேனி அருகே, சொத்து தகராறில் பெரியம்மாளை வெட்டிக் கொலை செய்த ராணுவவீரர் தலைமறைவானார்.

Update: 2022-04-23 01:15 GMT

தேனி அருகே வாழையாத்துப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் கண்ணையன், 38. இவரது குடும்பத்திற்கும் இவரது பெரியம்மாள் முத்தம்மாள், 64 குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த கண்ணையன்,  நேற்று இரவு தனது பெரியம்மாளுடன் தகராறு செய்து அரிவாளால் வெட்டினார். இதில்,  சம்பவ இடத்திலேயே முத்தம்மாள் பலியானார். பழனிசெட்டிபட்டி போலீசார் தலைமறைவாக இருக்கும் கண்ணையனை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News