ஸ்டவ் அடுப்பு வெடித்து பெண் உயிரிழப்பு
தேவாரத்தில் ஸ்டவ் அடுப்பு வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தார்.
கம்பம் அருகே உள்ள தேவாரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார், 46 மனைவி முத்துலட்சுமி, 40. கணவன் மனைவி இருவரும் தங்கள் வீட்டில் உள்ள மாடுகளுக்கு மண்ணெண்ணெய் அடுப்பில் தீவனம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து தீ பரவியது. இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துலட்சுமி இறந்தார். செந்தில்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.