கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய மனைவி: அச்சச்சோ அத்தனையும் பொய்யா?

பெங்களூரில், கணவர் பெயரை நெற்றியில் பச்சை குத்திய வீடியோ வைரலானது. அது போலியானது என்று இணையம் கூறுகிறது;

Update: 2023-05-23 04:31 GMT

கணவன் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்.

பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள பிரபல 'டாட்டூ' கடை, தன் டுவிட்டர் பக்கத்தில் 'உண்மையான காதல்' என்று, ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.அந்த வீடியோவில் ஒரு பெண், தன் கணவர் பெயரை, நெற்றியில் பச்சை குத்த சொல்கிறார். இதையடுத்து 'டாட்டூ' கலைஞர் பெண்ணின் நெற்றியில், சதீஷ் என்று பச்சை குத்தினார். இந்த பெண்ணின் கணவர் பெயர் சதீஷ். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர், லைக்குகள் போட்டு உள்ளனர்.

ஆனால் சிலர் 'இது ரொம்ப ஓவர். ஒருவரையொருவர் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்' என்பது தான் காதல். 'நெற்றியில் பச்சை குத்துவது வேடிக்கையானது' என்று கூறி உள்ளனர். 'இது முட்டாள்தனம். நெற்றியில் பச்சை குத்தி தான் உண்மையான அன்பை நிரூபிக்க வேண்டும் என்று இல்லை' என, சிலர் கருத்து பதிவிட்டு உள்ளனர்.

சமீபத்தில் திருமணக் கோலத்தில் இருந்த கணவனும் மனைவியும் சிகரெட் பிடித்து ஒருவர் வாயில் உள்ள புகையினை மற்றவர் வாய்க்குள் ஊதி அதன்பின்னர் வெளியிடுவது போன்ற வீடியோக்கள் வெளியாகின. இதற்கு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை செய்திருந்தனர்.

பெங்களுருவில் உள்ள கிங் மேக்கர் டாட்டூ ஸ்டுடியோவால் பகிரப்பட்ட வீடியோவில், அந்த பெண் அமர்விற்கு அமர்ந்திருப்பதை, கலைஞர் தனது கணவரின் பெயரின் ஸ்டென்சிலை நெற்றியில் வைப்பதைக் காட்டுகிறது. பச்சை குத்தியதை பார்த்து மக்கள் திகைத்தனர். இது போலியானது என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வீடியோவில் காட்டப்பட்டுள்ள பெண் மேற்கூறிய இடுகைக்குப் பிறகு பல கிளிப்களில் இடம்பெற்றுள்ளார், மேலும் அவர் சுத்தமான நெற்றியுடன் காணப்படுகிறார். எனவே அந்த டாட்டூ உண்மையில் போலியானது என்றே கூறலாம். அச்சச்சோ!

Tags:    

Similar News