தேவதானப்பட்டி அருகே தீ விபத்தில் மூதாட்டி பலி: போலீசார் விசாரணை
தேவதானப்பட்டி அருகே சமையல் செய்யும் போது, அடுப்பில் இருந்து பரவிய தீ, உடல் முழுவதும் பற்றி எரிந்ததில் மூதாட்டி ஒருவர் பலியானார்.;
தேவதானப்பட்டி அருகே ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வைரம்மாள், 90. இவர் அண்ணா பள்ளி அருகில் உள்ள தனது வீட்டில் நேற்று சமையல் செய்து கொண்டிருந்தார். சேலையில் பற்றிய தீ திடீரென மூதாட்டியின் உடல் முழுவதும் பரவியது. பலத்த தீக்காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.