பெரியகுளம் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் பலி
பெரியகுளம் அருகே இலவங்காய் சேகரிக்க சென்ற பெண் மின்சாரம் பாய்ந்து இறந்தார்.;
பெரியகுளம் நேரு நகரை சேர்ந்த காமராஜ் என்பவர் மனைவி பொன்னுத்தாய். (வயது ஐம்பத்தி ஐந்து). இவர் தோட்டத்து பகுதியில் இலவங்காய் சேகரித்துக் கொண்டிருந்தார்.
மழை பெய்ததால் மின்வயர் அறுந்து கிடந்தது. அதில் மிதித்து பொன்னுத்தாய் மின்சாரம் பாய்ந்து இறந்தார். பெரியகுளம் வடகரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.