சின்னமனுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமையுமா?

சின்னமனுாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-09 05:08 GMT

பைல் படம்.

தேனி மாவட்டம், சின்னமனுார் நகராட்சி மற்றும் சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்கள் கல்வி, வாழ்வாதாரத்திற்கு சின்னமனுாரையே நம்பி உள்ளனர். சுற்றுக்கிராம மாணவிகள் படிக்க சின்னமனுார் வருகின்றனர்.

ஆனால் சின்னமனுார் நகராட்சியில் பெண்களுக்கு தனியாக மேல்நிலைப்பள்ளி இல்லை. இங்கு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News