தோட்டக்கலை அலுவலகம் பயன்பாட்டிற்கு வருமா?

தேனி தோட்டக்கலை அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

Update: 2023-11-30 08:45 GMT

பைல் படம்

தேனி தோட்டக்கலை அலுவலகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது..தேனி அருகே அல்லிநகரத்தில் பெரியகுளம் ரோட்டோரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டதும், உதவி இயக்குனர் அலுவலகமும் இங்கு இடம் மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த கட்டடத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல் விட்டு விட்டனர்.

தற்போது புதர்களுக்குள் இந்த கட்டடம் புதைந்து காணப்படுகிறது. தற்போது இந்த பகுதியில் உயர்ரக ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதிகளவில் வந்துள்ளன. மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.

ஆனால் புதர் காடாக மாறி உள்ள கட்டட வளாகத்தை குடிமகன்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இரவில் இங்கு சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதனால் நல்ல நிலையில் உள்ள இந்த கட்டட வளாகம் மிகவும் மோசமான நிலைக்கு மாறி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கும் தேவையற்ற தொந்திரவுகள் அதிகரித்து வருகிறது. இந்த கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News