திராவிட கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை வசமாக்கும் பாஜகவின் திட்டம் வெல்லுமா

மாவட்ட வாரியாக திராவிட கட்சி உட்பட மாற்றுக்கட்சி வி.ஐ.பி.க்களை வசமாக்கி கட்சியை பலப்படுத்தும் பணியில் பாஜக இறங்கியுள்ளது

Update: 2022-06-09 04:15 GMT

நடிகை குஷ்பு பா.ஜ.கவில் இணைந்த போது பெரும் அதிர்வலை ஏற்பட்டது. பா.ஜ.கவிற்கு இப்படி ஒரு பரிதாப நிலையா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்தது. இன்று அக்கட்சியின் வளர்ச்சி பிற கட்சிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதை யாராலும் மறுக்க முடியாது. தவிர தற்போது நடிகை நக்மா சேரப்போகிறார் என்ற தகவல் உலா வந்து கொண்டுள்ளது.

அதேநேரம் சசிகலாவிற்கு நயினார்நாகேந்திரன் இரண்டு முறை அழைப்பு விடுத்ததையும், அதற்கு இதுவரை சசிகலா தரப்பில் இருந்தும், வேறு எந்த தரப்பில் இருந்தும் பதில் அளிக்காமல் இருப்பதையும் அரசியல் விமர்சகர்கள் கவனிக்க தவறவில்லை. ஆக பா.ஜ.கவின் திட்டம் தான் என்ன என்று அரசியல் விமர்சகர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒரு புறம் குஷ்பு, நக்மா, சசிகலா என்று வலைய வந்து கொண்டிருக்கும் பா.ஜ.க  ஜாதிக் கொடுமையால் பெரும் சங்கடத்திற்கு உள்ளான கிராம ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரியையும் தன் கட்சியில் சேர்த்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.க கட்சி வளர்ச்சி தான் முக்கியம். ஜாதி பாகுபாடுகளுக்கு இடம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்தி விட்டது.

தற்போது சத்தமில்லாமல் பா.ஜ.க பெரிய வளையம் போட்டு வருகிறது. மாவட்ட வாரியாக பிற கட்சிகளில் உள்ள வலுவான பணித்திறன் கொண்ட தலைவர்களின் பட்டியலை தன் கையில் வைத்துள்ளது. அவர்களை பா.ஜ.கவிற்கு கொண்டுவர ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதற்கு பிரதிபலனாக என்ன செய்ய வேண்டும் என்ற பேரமும் நடத்துகிறது.

இதனை வைத்து கணிக்கையில் வரும் லோக்சபா தேர்தலிலும் சரி, சட்டசபை தேர்தலிலும் சரி திராவிட கட்சிகள் எந்த பாணியினை பின்பற்றினாலும், அதேபாணியில் அக்கட்சிகளை வீழ்த்த மிகப்பெரிய வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. விரைவில் திராவிட கட்சி உட்பட வேறு பல கட்சிகளில் உள்ள பல முக்கிய தலைகள் காவித்துண்டு அணிவதை பார்க்க முடியும். அதுவும் மாவட்டந்தோறும் இந்த மாற்றம்  நடைபெறும் என பா.ஜ.கவினர் உற்சாகமாக கூறி வருகின்றனர்.

Tags:    

Similar News