ஆண்டிப்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் மீட்பு

Flood News Today- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 200 பேர் மீட்கப்பட்டனர்.;

Update: 2022-07-29 02:52 GMT

Flood News Today- தேனி மாவட்டம், ஆண்டிபட்டி கடமலைக்குண்டு, உப்புத்துறை, யானைகெஜம் வழியாக பல நுாறு பேர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடித்து இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை ஒரு மணிக்கு பெய்த பலத்த மழையில் இவர்கள் யானை கெஜம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் வந்தது. இந்த வெள்ளத்தில் 200 பேரும் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார், மயிலாடும்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இவர்களை நள்ளிரவே பத்திரமாக கயிறு கட்டி மீட்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News