மேகமலையில் வேட்டையாடப்படும் வன வனவிலங்குகள்!

தேனி மாவட்டம் மேகமலையில் வனவிலங்குகளை பலர் வேட்டையாடி வருகின்றனர்.

Update: 2023-11-28 02:45 GMT

இந்த வேட்டைக்கும்பலுக்கும் வனத்துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

தேனி மாவட்டம் மேகமலை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் உள்ளது. இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. இதில் அபூர்வ வகையினை சேர்ந்த மான்கள், மிளா, கேழையாடு, குரங்குகள், காட்டுமாடு, காட்டுப்பன்றி போன்ற அபூர்வ வனவிலங்குகளை சிலர் வேட்டையாடி வருகின்றனர்.

இந்த வேட்டைக்கும்பலை தடுக்க வனத்துறை உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக வேட்டை கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு மாமூல் பெறுகின்றனர் என சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி வருகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேட்டை கும்பல் அதிகாரிகளின் தொடர்பில்லாமல்் வனத்திற்குள் நுழையவே முடியாது. சரியான முறையில் வனத்துறை அதிகாரிகள் வேலை செய்வதில்லை. வன திருட்டுக்கும்பல் எந்த பகுதியில் வேட்டை நடத்த வேண்டும் என இவர்களே வழிகாட்டுகின்றனர். ஆனால் தங்களது மாவட்ட, மாநில உயர் அதிகாரிகளுக்கு ‛பணியாளர்கள் பற்றாக்குறையால் வேட்டையை தடுக்க முடியவில்லை.

வேட்டை தொடர்கிறது. எங்களால் முடிந்த அளவு தடுக்க முயற்சிக்கிறோம்’ என இவர்களே ஒரு அறிக்கையும் அனுப்பி அதிகாரிகளின் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்கின்றனர். இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளி்ல் வனவிலங்குகள் அழிக்கப்பட்டு விடும். இதனால் உடனடியாக உயர் அதிகாரிகள் இப்பிரச்னையில் தலையிட்டு வேட்டையை முற்றிலும் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News