தேனி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின்னர் பரவலாக மழை
தேனி மாவட்டத்தில் 15 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது
தேனி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பின்னர் நேற்று பரவலாக மழை பெய்தது. காலை முதல் வானம் அடர்ந்த கருமேகங்களுடன் காணப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு மேல் மாவட்டத்தில் பல இடங்களில் மழை துாறல் பெய்தது. நீண்ட நேரம் இந்த துாறல் இருந்து கொண்டே இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 2.6 மி.மீ., அரண்மனைப்புதுாரில் புள்ளி 8 மி.மீ., போடியில் 5.4 மி.மீ., கூடலுாரில் 3.8 மி.மீ., பெரியகுளத்தில் 5 மி.மீ., தேக்கடியில் 1.2 மி.மீ., உத்தமபாளையத்தில் 3.6 மி.மீ., வைகை அணையில் 2.8 மி.மீ., வீரபாண்டியில் 8 மி.மீ., மழை பதிவானது.
இன்று காலை முதல் வானம் அடர்ந்த மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. மாவட்டம் முழுவதும் ஈரப்பதம் நிறைந்த குளிர் காற்று வீசுகிறது. 15 நாட்களுக்கு பின்னர் பருவநிலை மாற்றத்தால் அருமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.