எதிரிகளை வீழ்த்த இந்தியா அவசரம் காட்டாதது ஏன்

Enemy Countries of India- நம்மில் பலர் பாகிஸ்தான் வீழும் நிலையில் உள்ளது. இனியும் இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற அவசரமும் தெரிகிறது;

Update: 2023-01-31 00:45 GMT

பைல் படம்

Enemy Countries of India- பாகிஸ்தான் வீழும் நிலையில் உள்ளது. இனியும் இதுபோன்ற ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற அவசரமும் புரிகிறது. ஆனால், அப்படி ஒரு நிலையை நாம் எடுத்தால் நம்மை வீழ்த்த நினைக்கும் சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பியா, அரேபியா என்று நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி செய்ய வந்து விடும். அதாவது சாகப்போகிறவனை அடித்து சங்கடத்தில் மாட்டிக்கொள்வது போலத்தான்.  

தீவிரவாதம் எப்படி நாட்டு மக்களை சீரழிக்கும் என்பதற்கான உலகின் மோசமான உதாரணம் ஆப்கானிஸ்தான். முன்னுதாரணம் பாகிஸ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

பாகிஸ்தானிடம் தாக்கும் திறன் மிக மோசமான நிலையில் இருக்கிறது. அதற்கு வாழ்வா, சாவா என்றால், நாம் எப்படியிருந்தாலும் இந்தியாவிடம் வீழப்போகிறோம். எனவே சாவதற்கு முன்பு இந்தியாவை சாவடிப்போம் என்று அணுகுண்டை வீச முடிகிறதோ இல்லையோ ஆனால் முயற்சிப்பார்கள். எதற்கு அந்த தேவையில்லாத ரிஸ்க்?

அதற்கு பதிலாக வறுமையில் சிதறும் அந்த நாட்டுக்கு எதிராக, அவர்களின் எதிரிகளை ஒருங்கிணைக்கும் பணியில் இந்திய உளவு நிறுவனம்(RAW) மிகச்சிறப்பான வேலையை செய்கிறது. அதன் அடித்தளத்தில்  பாகிஸ்தானின்  வீழ்ச்சி அருகில் அது தோற்றுவித்த அதே தீவிரவாதிகளால்தான் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான்  மீண்டும் தனது சுதந்திர தினத்தை ஒரே நாடாக இன்னொரு முறை கொண்டாடுமா என்பது சந்தேகம். அப்போது அவர்களாகவே உடைந்து இந்தியாவோடு சேர்கிறோம் என்று கூறும்போது சேர்த்துக் கொள்வோம்.

அதற்கு முன்பு தைவான் விஷயத்தில் சீனாவும்-அமெரிக்காவும் மோத வேண்டிய சூழல் காத்திருக்கிறது. ஆனால் அவ்வளவு எளிதாக மோதவும் முடியாது, வீழும் பொருளாதாரத்தை காக்க மோதாமல் இருக்கவும் முடியாது. ஒன்று போரில் தோற்க வேண்டும் அல்லது பொருளாதாரத்தில் தோற்க வேண்டும். அமெரிக்கா- சீனா அடிச்சிக்கிட்டு சாவதை வேடிக்கை.பார்ப்பதில் தவறில்லை . 

இந்த நேரத்தில் உலகத்தில் வீழும் பொருளாதாரத்தை நாம் இன்று நமக்கு சாதகமாக மாற்றிக் கொண்டால் வீழ்ந்து கொண்டுக்கும் எதிரிகளை எல்லாம் எப்போது வேண்டுமானாலும் நாம் எளிதில் வீழ்த்தி விடலாம். உதாரணமாக அமெரிக்காவின் ஒரு பெரிய நிறுவனம் வீழ்ந்தால், அதை நமது டாட்டாவோ, விப்ரோவோ வாங்கட்டுமே.

அப்போது எளிய விலையில் கிடைப்பது மட்டுமல்ல, அவர்களிடம் இருக்கும்.டெக்னாலஜி நமக்கு போனஸாக வரும். ஜாகுவார் கார் வாங்கியது ஞாபகம் இருக்கிறதா? அதற்கு பின்னால் டாடா காரின் தரம் எப்படி மாறியது? எனும்போது, நாம் எதற்காக தானாக விழும் பழத்தை தடி கொண்டு அடிக்க வேண்டும்.  இந்தியா காத்திருக்கும். RSS ன் மிகப் பலமான யுக்தியே கடமையை செய்வோம், அவசரப்படாமல் காத்திருப்போம் என்பதுதான்.அது பாகிஸ்தான் விஷயத்தில் நடக்குமா என்பதை காலம்தான் உணர்த்த வேண்டும்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News