சின்னமனுாரில் மொத்த காய்கறிகள் வணிக வளாகம்: எம்.எல்.ஏ. தகவல்

சின்னமனுாரில் மொத்த காய்கறிகள் வணிக வளாகம் அமைக்கப்படும் என கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்;

Update: 2023-09-23 16:00 GMT

சின்னமனுாரில் நடந்த மொத்த காய்கறி வணிக வளாகம் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் பேசினார்.

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வளாகத்தில் மொத்த காய்கறிகள் வணிக வளாகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கம்பம் எம்.எல்.ஏ. இராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘வணிக வளாகம் அமைப்பதற்குத் தேவையான இடம், அரசாங்கத்தால் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும். அரசு சார்பில் சாலை வசதி, மின் இணைப்பு, ஆய்வகம், ஓய்வரைகள்,ஏடிஎம், கேண்டீன் வசதி ஆகியவைகளும் ஏற்படுத்தப்பட உள்ளன. இவற்றை ஆராய துறை மூலம் Consultant உடனடியாக அமைக்கப்படும். வியாபாரிகள் கலந்து யோசித்து தேவைப்படும் கடைகள் எண்ணிக்கை மற்றும் அளவு விவரங்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டும் இதன் அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அரசு ஒப்புதலுடன் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் சின்னமனூர் நகராட்சி துணைத் தலைவ.முத்துகுமார், வேளாண் இணை இயக்குநர் க.முரளிதரன், தேனி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்சரவணன், தேனி விற்பனைக்குழு செயலாளர் ஆறுமுகராஜன், இந்த கூட்டத்தில் சின்னமனூர் உத்தமபாளையம் மற்றும், கம்பம் வட்டார சந்தை சார்ந்த விவசாயிகளும், வியாபாரிகளும் கலந்து கொண்டனர். மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News