36000 கோடிக்கு அதிபதி! யார் இந்த ராதா வேம்பு?
பலருக்கு இன்ஸ்பிரேஷனாக மாறிய தமிழகத்தின் பணக்கார பெண்ணை பற்றி பார்க்கலாம்.;
பிரபல ZOHO Corp நிறுவனத்தின் இணை நிறுவனர் தான் ராதா வேம்பு. அவரது மூத்த சகோதரர் ஸ்ரீதர் வேம்புவால் கடந்த 1996ம் ஆண்டு நிறுவப்பட்டது தான் இந்த ZOHO Corp என்ற நிறுவனம். 1996ம் ஆண்டு சிறிய அளவில் அவர்கள் துவங்கிய போது "அட்வென்ட்நெட்" என்ற பெயரில் தான் தங்கள் முதல் வணிகத்தைத் அவர்கள் தொடங்கினார்கள்.
ZOHO பற்றி கேள்விப்பட்டதுண்டா?
Zoho கார்ப்பரேஷன் என்பது கணினி மென்பொருள் மற்றும் இணைய அடிப்படையிலான வணிகக் கருவிகளை உருவாக்கும் ஒரு இந்திய பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமாகும். Whatsapp செயலுக்கு மாற்றாக "அரட்டை" என்ற செயலியை இந்த நிறுவனம் இப்பொது டெஸ்டிங் ஸ்டேஜில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராதா வேம்பு
திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயாக இப்போது சென்னையில் தான் வாழ்ந்து வருகிறார் ராதா வேம்பு. கடந்த 1973 ம் ஆண்டு சென்னையில் பிறந்த அவருக்கு வயது 52 சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ராதா, மெட்ராஸ் IITயில் தான் தனது கல்லூரி படிப்பையும் முடித்தார். பிறகு தனது சகோதரரோடு இணைந்து சொந்த நிறுவனத்தை துவங்க அனைத்துவித பணிகளையும் மேற்கொண்டார்.
Zoho நிறுவன பங்குகளை பொறுத்தவரை ராதா வேம்பு தான் அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார். சரியாக சொல்லப்போனால் Zoho நிறுவனத்தின் 47 சதவிகித பங்குகள் அவரிடம் தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் மின்னஞ்சல் சேவையான Zoho Mailன் தயாரிப்பு மேலாளராகவும், கார்பஸ் அறக்கட்டளையின் இயக்குநராகவும் உள்ளார் ராதா வேம்பு.
ராதா வேம்பு சொத்து மதிப்பு
கடந்த பல ஆண்டுகளாக தனது சகோதரோடு இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை உருவாகியுள்ள ராதா வேம்புவின் சொத்து மதிப்பு ரூ.36,000 கோடி. இந்திய அளவில் சுமார் 22,500 கோடி சொத்து மதிப்புள்ள ஃபால்குனி நாயர் 86வது இடத்தில் உள்ள நிலையில், ராதா வேம்பு இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களில் 40வது இடத்திலும் உள்ளார்.
ராதா வேம்புவின் தந்தை சாம்பமூர்த்தி வேம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபராக இருந்தார். ராதா வேம்பு புகழ்பெற்ற மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர். 1997ல் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporation நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனம், 1996ல் அவரது அண்ணன் ஸ்ரீதர் வேம்பால் தொடங்கப்பட்ட அட்வென்ட்நெட் என்ற நிறுவனம் தான்.
2009ல் Zoho Corporation என்று பெயர் மாற்றப்பட்டது. தொழில் நுட்பத்தின் மீதான அபரிமிதமான ஆர்வம், புதுமையான மனநிலை மற்றும் வெற்றிக்கான உந்துதல் ஆகியவற்றின் காரணமாக ராதா படிப்படியாக நிறுவனத்தின் உயர்ந்தார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், Zoho நிறுவனம் தற்போது 180 நாடுகளில் பல்வேறு வணிக தேவைகளுக்கு சேவை செய்யும் கிளவுட் அடிப்படையிலான அப்ளிகேஷன்களின் முழுமையான தொகுப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் ரூ.2,700 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது. ராதா வேம்பு பல்வேறு கல்வித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான கல்வி முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறார். விவசாய தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜானகி ஹைடெக் அக்ரோ மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹைலேண்ட் வேலை என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்
அவரது மூத்த சகோதரர் ஸ்ரீதர் வேம்பு வசம் 5 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளது. ஸ்ரீதர் வேம்பு 1989ல் மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் படித்தவர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் குவால்காமில் பணியாற்றினார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.