பிரதமர் மோடிக்கு அரசியல் சாணக்கியர் யார் ?
இயற்கை மூன்று பக்கம் கடலையும், ஒரு பக்கம் இமயமலையையும் அரணாக அமைத்து இந்தியாவை பாதுகாத்து வருகிறது.
இது காலமும் இந்தியாவை இது பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது இந்தியாவிற்கு செயற்கையாக சில ஆபத்துகள் இந்தியாவைச் சுற்றிலும் சாரை பாம்புகளாக கட்டுவிரியன்களாக இந்தியாவை சீர்குலைக்க ஆயுதம் விரித்து படம் எடுத்து காத்து கொண்டிருக்கின்றன.
இந்த நச்சுப் பாம்புகளும் சாரைப்பாம்புகளும் சீறும் பொழுது அவைகளை அடக்கி மதி மயங்கச் செய்யும் மகுடியாக தமிழர் ஒருவர் அதன் கவனத்தை திசை திருப்பி கொண்டிருக்கிறார்.இந்த சாரை பாம்புகள் இந்தியாவை தீண்ட நினைக்கும் போதெல்லாம் சில சமயம் மகுடி ஊதும் பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அதற்கு அடங்காமல் சீறும் பொழுது தலையில் அடித்து பல்லை பிடுங்கி எடுக்கும் சூரனாகவும் இந்தியாவின் பாதுகாப்பு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
சர்வதேச அளவில் இந்தியாவின் வெளியுறவுத்துறை இந்த அளவுக்கு சிறப்பாக செயல்படுவதற்கு அதி முக்கியப் பங்கு வகிக்கிறார்.இந்தியாவின் தீராத பிரச்னைகளை தலைவலியான பிரச்சினைகளை தீர்ப்பதில் சிறந்த கைதேர்ந்த ஒரு அரசியல் சாணக்கியராகவே விளங்குகிறார். இந்தியாவிற்கு தீராத தலைவலி கொடுத்த காஷ்மீர் பிரச்சினையை இரண்டு கிராமங்களுக்கு இடையே உள்ள பிரச்னையை போன்று அசால்டாக தீர்த்து வைத்ததில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்திய சீன எல்லை பிரச்னைகளில் குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம், தபாங் மற்றும் கல்வான் சம்பவங்களில் இந்திய ராணுவம் சீன இராணுவத்தை சில்லறையாக சிதற விடுவதற்கு.... இவருடைய வெளியுறவுக் கொள்கை செயல்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவிற்கு யாரெல்லாம் எதிராக நிற்கின்றனரோ. அவர்களைத் தன்னுடைய அசாதாரண பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வைக்கிறார். எதிரிகளையும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களையும் இந்தியாவுக்கு ஆதரவாக சாதகமாக மாற்றுகிறார்.
இவருடைய வார்த்தைகள் அக்னி போன்று பயங்கரமாக இல்லாமல் பிரம்மோஸ் போன்று லாகவமாக மிகத் துல்லியமாக உள்ளன. உலகில் பல முக்கியமான பிரச்சனைகளில் இந்தியாவின் கருத்துகளை உலக நாடுகள் இன்று கவனித்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் இவருடைய திறமையும் பேச்சாற்றலும் செயல்பாடுகளும் தான்.
பாதுகாப்பு, பொருளாதாரம், வளர்ச்சி, கட்டமைப்பு என அனைத்துத் துறைகளைச் சார்ந்த பிரச்சினைகளிலும் இந்தியாவின் நிலைப்பாட்டையும் அதன் செயல்பாடுகளையும் உலக நாடுகள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார். இன்றைய நவீன இந்தியாவின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் செயல்பாடுகளிலும் இவருடைய பங்கு மிகவும் இன்றியமையாதது.
அன்று சந்திரகுப்த மௌரியருக்கு ஒரு சாணக்கியர் கிடைத்தார்...இன்று பாரதப் பிரதமர் மோடிக்கு அரசியல் சாணக்கியராக சுப்பிரமணியம் கிடைத்துள்ளார்...கம்பி மீது யார் வேண்டுமானாலும் நடக்கலாம்... ஆனால் கூர்மையான கத்தியின் மீது தலையில் அணுகுண்டுகளை சுமந்து கொண்டு ஒருவர் நடக்கிறார் என்றால் அது அவ்வளவு சுலபமான காரியமல்ல.
கரணம் தப்பினால் மரணம் என்பது போன்றது கடுகளவு பிசகினாலும் அதன் தன்மையே மாறிவிடும்...சர்வதேச அரங்கில் இவருடைய வார்த்தைகளே இந்தியாவின் வார்த்தைகளாக பார்க்கப்படுகின்றன.ஒரு வீரனின் வெற்றி என்பது அவனுடைய வீரத்தை விட அவனுடைய ராஜதந்திரமே மிக எளிதான வெற்றியை கொடுக்கிறது.
பாரதப்போரில் சாரதியாக பரமாத்மா பாண்டவர்களுக்கு வெற்றியை தேடி தந்தார்...இன்றைய அண்டை நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் சர்வதேச நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் என இந்தியாவின் ஆன்மாவை ஆழத்தை பதம் பார்க்கும் பிரச்னைகளில் இந்தியாவை சிறப்பாக வழிநடத்தி செல்லும் சாரதியாக இருக்கிறார்...
உலக நாடுகளில் உள்ள அத்தனை நாட்டு உளவுத்துறைகளும் இவரை கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. இவரின் ஒவ்வொரு அசைவையும் உலகம் கூர்ந்து கவனித்து வருகின்றது. அதிபருக்கும் பிரதமருக்கும் தரக்கூடிய சிவப்பு கம்பள வரவேற்பை இன்று உலகம் இவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது.அத்தகைய சூழ்நிலையில் இருந்து கொண்டு இன்று இந்தியாவுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கும் இந்த மாமனிதன் தமிழகத்தை சேர்ந்த ஜெய்சங்கர் சுப்பிரமணியம்.தரணி ஆண்டான் தமிழன் என்று சொல்வார்கள் உண்மையிலேயே இன்றைய தேதியில் தரணியை ஆண்டு கொண்டிருப்பவர் இந்த தமிழன் தான்.