தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக இருப்பது யார்?

தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகள் பாஜகவிற்கு இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த உட்கட்சி கூட்டத்தில் பேசினார்.;

Update: 2023-01-05 04:15 GMT

பைல் படம்

தமிழ்நாட்டில் பாஜகவின் பூத் கமிட்டிகள் வளரவில்லை. கட்சி வலிமையாக இல்லை என்று பொன்னார் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருமா வராதா என்று தெரியாமலே கட்சிக்காக 20 - 30 ஆண்டுகளாக சீனியர்கள் வேலை பார்த்தனர். அந்த சீனியர்களை யாரும் மதிப்பது இல்லை. அந்த சீனியர்களே இப்போது கட்சிக்கே ஓட்டு போட மாட்டார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் கட்சி கூட்டத்திலேயே அண்ணாமலை, சி.டி. ரவிக்கு முன்பாக பேசினார்.

கட்சி பற்றி எல்லாம் தெரிந்த பொன் ராதாகிருஷ்ணன் தான் இப்படி பேசுகிறார். பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயர் தமிழ்நாடு முழுக்க உச்சரிக்கப்படுகிறது. அவர் பிரபலமாக இருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார். இதனால் வென்று விடுவோம் என்று நினைக்கிறார். அவருக்கு யார் என்ன ரிப்போர்ட் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ரஜினி இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தார். அவர் அரசியலுக்கு வந்தால் அதிமுக உடையும், ஆட்சி மாறும் என்றெல்லாம் கூறினார்கள். கடைசியில் எடுக்கப்பட்ட சர்வேயில் அவருக்கு 8.5% வாக்குகள்தான் வரும் என்றார்கள். 2- 3 எம்எல்ஏ-க்கள்தான் வரும் என்றார்கள். அதனால் ரஜினி அரசியலுக்கே வரவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இது ஏன் தெரியவில்லை. அண்ணாமலை பிரபலமாக இருக்கலாம். ஆனால் அது எல்லாம் வெற்றிபெற உதவாது. அவருக்கு ஒரு எம்பிதான் கிடைக்கும். கன்னியாகுமரியில் ஜெயிக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி இருந்தால் அதற்கும் வாய்ப்பு இல்லை.

தமிழ்நாட்டில் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 25 இடங்களில் எல்லாம் பாஜக வெற்றி பெற வாய்ப்பே இல்லை. பொன் ராதாகிருஷ்ணன் பேசுவதை சிடி ரவி அதை பார்த்துக்கொண்டு இருந்தார். தமிழ்நாட்டில் பூத் கமிட்டி அமைத்து கொடுங்கள் என்று சிடி. ரவியும் கேட்டு இருக்கிறார். இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகவிற்கு பூத் கமிட்டி இல்லை என்பதை பொன். ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.

பொன்னார் தமிழ்நாட்டில் பாஜக வளரவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த அருணாசலம் பாஜகவுக்கு வந்துவிட்டு மீண்டும் திரும்பி அக்கட்சிக்கே சென்று விட்டார். கு க செல்வம் திமுகவில் இருந்து பாஜவுக்கு  விட்டு, பாஜகவில் இருந்து மீண்டும் திமுக வந்துவிட்டார். இப்படி பல நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டனர். பாஜக வளருகிறது என்றால் ஏன் இவர்கள் எல்லாம் வெளியேற வேண்டும்? அண்ணாமலை நல்ல தலைவராக இருந்தால் எப்படி பாஜக வளரும்? ஊருக்கு ஊர் மீட்டிங் போட்டால்.. மேடைக்கு மேடை பேசினால்.. கட்சி வளரும் என்று அண்ணாமலை நினைக்கிறார். அது தவறு என்று குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News