கேரிபேக்குகள் கட்டுக்குள் வந்தாலும் பாலித்தீன் பயன்பாடு குறையவில்லை

தேனியில் கேரி பேக்குகள் குறைந்தாலும் இதரவழிகளில் பாலித்தீன் பயன்பாடுகள் எதுவும் குறையவில்லை

Update: 2023-12-02 03:15 GMT

பைல் படம்

மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள ஒரு முறை பயன்படுத்தும் பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கும் திட்டம் ஏட்டளவில் மட்டுமே உள்ளது. தேனியில் கேரிபேக்குகள் குறைந்தாலும் இதர பயன்பாடுகள் எதுவும் குறையவில்லை.

மாநிலம் முழுவதும் கேரி பேக்குகள், ஒருமுறை பயன்படுத்தும் பாலிதீன் பைகளுக்கு தடை விதித்து மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் இந்த தடை விதிக்கப்பட்ட போது, இதனை அமல்படுத்துவதில் அதிகாரிகள் அக்கரை காட்டினர். இதனால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலீதீன் பைகளின் பயன்பாடு குறைந்துள்ளது. இது தவிர வேறு எந்த வகை பாலிதீன் பயன்பாடுகளும் குறையவில்லை.

இது குறித்து தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‛பாக்கெட்டில் உணவுப்பொருட்களை அடைத்து வைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வழியே இல்லை. இதன் மூலம் மட்டுமே 50 சதவீதம் பாலிதீன்கள் புழக்கத்தில் உள்ளன. தவிர கேரிபேக்குகளை தவிர்த்து 100க்கும் மேற்பட்ட வகைகளில் பாலிதீன்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் ஒன்று கூட தடுக்கப்படவில்லை.

இதனால் கேரிபேக்கிற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எந்த பலனும் இல்லை. தேனியில் பாலிதீன் பயன்பாடுகள் அதிகம் உள்ளதால் கழிவுநீர் கால்வாய்களை அடைத்துக் கொண்டு விடுகிறது. இதனை அகற்ற துப்புரவு பணியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கிட்டத்தட்ட மாவட்டம் முழுவதும் இந்த பிரச்னை நிலவுவதால், பல்வேறு வகையான காய்ச்சல்கள், புதுப்புது நோய்கள் உருவாகி வருகின்றன. பாலிதீன் பயன்பாட்டினை குறைப்போம் என கோஷம் போட்டால் மட்டும் போதாது. அதனை நடைமுறைப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News