அடுத்து என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?

Edappadi Palanisamy- அடுத்து என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2022-08-18 06:24 GMT

எடப்பாடி பழனிசாமி.

Edappadi Palanisamy- ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் தொடர் தடைகள், வழக்குகள், போராட்டக்கங்களை கடந்து கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கூடியது. அதில் எடப்பாடி பழனிசாமி அனைவரும் எதிர்பார்த்ததைபோல் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார். அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட பலரையும் எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கினார். இதற்கு பதிலடி தரும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு தொடர்ந்தது. பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது. ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23க்கும் முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போயுள்ளது. எனவே இனி எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லாது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இனி அ.தி.மு.க.வில் தனது அதிகாரத்தை நிலைநாட்ட இரண்டே வழிகள்தான் உள்ளன. கட்சி விதிப்படி அவைத் தலைவரால் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்க முடியாது என்பதால், ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவுறுத்தலை ஏற்று பொதுக்குழுவை கூட்டி தனது செல்வாக்கை பயன்படுத்தலாம். இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பெரும்பாலும் சம்மதிக்க வாய்ப்பில்லை. அல்லது உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்து ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு முடிவுகளை செல்லுபடியாக்க முயற்சிக்கலாம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News