அப்பாவின் சொத்தில் பெண்களுக்கு என்ன உரிமை?
அப்பாவின் சொத்தில் பெண்களுக்கு என்ன உரிமை உள்ளது என்பதை பற்றி வக்கீல் ஒருவர் எழுதிய பதிவு.;
உயில் எழுதாவிட்டாலும் 1989க்கு பிறகு தமிகத்தில் பிறந்த எல்லா பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் முழு உரிமை உண்டு.
1).தாயின் சொத்துக்களை யார் உரிமை கோரலாம்?
2).தாயின் சொத்துக்கள் யாருக்கு சேரும்?
3).வாரிசுரிமை சட்டம் சொல்வது என்ன தெரியுமா?
4).பெண்களுக்கு சொத்துரிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது என்ன?
5).அப்பாவின் சொத்தில், பெண்களுக்கும் முழு உரிமை உள்ளது..
திருமணமான பெண்களானாலும் சரி, திருமணமாகாத பெண்களானாலும் சரி, தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில் பெண்களுக்கு பங்கு உள்ளது. சொத்துக்கள்: ஆனால், திருமணமான பெண்ணின் அப்பா, தன்னுடைய சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்து விட்டால், அதை உரிமை கோர முடியாது. ஆனால், அப்பா உயில் எதுவும் எழுதி வைக்காத நிலையில், வாரிசு என்ற அடிப்படையில் மகள்களுக்கும், விதவை மனைவிக்கும் முழு உரிமை உள்ளது.
விவாகரத்தாகி, மறுமணம் செய்து கொள்ளாத பெண்ணின் மகனுக்கு, முன்னாள் கணவரின் பூர்வீக சொத்திலும் பங்கு உள்ளது. அந்த முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை மணந்து அவருக்கு குழந்தைகள் இருந்தாலும்கூட, இந்த பெண்ணின் மகனுக்கு பூர்வீக சொத்தில் உரிமை உள்ளது. வாரிசுகள்: அதேபோல, முதல் மனைவிக்கு வாரிசுகள் இல்லாத பட்சத்தில், அதாவது உரிமையாளரின் மனைவி, குழந்தைகள் இல்லாத பட்சத்தில், அந்த சொத்தை 2-ம் வாரிசுகளுக்கு, அதாவது மகனின் மகள் அல்லது மகன், மகளின் மகள் அல்லது மகள், சகோதரன், சகோதரி போன்றவர்களுக்கு சொத்தை பிரித்து தரலாம்..அதேபோல, தாயின் சொத்தில் மகள்களுக்கும் பங்குள்ளதா? பெண் வாரிசுகள் தங்களுக்கு சொத்தில் பங்கு தேவையில்லை என்கிற பட்சத்தில், சொத்துக்களை மற்ற வாரிசுகள் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால், திருமணமான பெண்களுக்கான சொத்து உரிமையில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அம்மா சொத்து: அம்மாவின் சொத்தினை, தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம்.
இதை உயில், செட்டில்மென்ட் போன்ற எந்த வழியில் வேண்டுமானாலும் எழுதி தரலாம்.. ஒருவேளை, யாருக்கும் எழுதி தராமல் அம்மா இறந்து விட்டால், தாயின் முதல் வாரிசாக பிறந்த பிள்ளைக்கு சேரும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் முதல் வாரிசுக்கு தான் சேரும். ஆனால், அம்மா சுயமாக சம்பாதித்த சொத்துக்களை, அவர் இறப்பதற்கு முன்பு , அவருக்கு பிறகு அத்தனை சொத்துக்களும் மகன்களுக்கு மட்டுமே என்று உயில் எழுதி வைத்திருந்தால் அதில் மகளுக்கு உரிமையில்லை..சொத்தினை தாமாக தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி உரிமை கோர முடியாது. அதே நேரத்தில் மகளுக்கு பங்குண்டு என்று எழுதியிருந்தாலோ அல்லது உயிலே எழுதாமல் இருந்தாலோ சொத்தில் ஒரு பங்கு மகளுக்கும் உண்டு. உரிமை கோருதல்: அதுபோலவே, தாம் சுயமாக வாங்கும் நிலத்தினை, அவராக முன்வந்து தராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி உரிமை கோர முடியாது. ஆனால் மூதாதையர் நிலத்தினை, அவர்கள் காலமான பிறகு, வாரிசு என்ற அடிப்படையில் அம்மா அடைந்ததன் மூலம் உரிமை பெற்றிருந்தால், அவர் தாமாக தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் சட்டப்படி கோர்ட்டை அணுகி உரிமை கோரலாம். அதேசமயம், மூதாதையர் நிலத்தினை அவர்கள் காலமான பிறகு வாரிசு என்ற அடிப்படையில் அம்மா அடைந்ததன் மூலம் உரிமை பெற்றிருந்தால், அவர் தாமாக தர முன்வராத நிலையில், அதனை மகள்கள் கோர்ட் மூலம் அணுகி உரிமை கோரலாம்.எனவே, உயில் எழுதுவது குறித்த சந்தேங்களை, வழக்கறிஞர்களிடம் கேட்டு தெளிவு பெறுவதும், ஆலோசனை பெற்றுக்கொள்வதும் நல்லது.
நன்றி: Anbu. Advocate. Perambalur.....