பணப்பயன்களை நிறுத்த மாட்டோம் - நலவாரிய அதிகாரிகள் உறுதி

“நலவாரிய உறுப்பினர்கள் தரவுகள் அழிந்து போனாலும், பணப்பலன்களை நிறுத்த மாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.;

Update: 2024-01-31 16:03 GMT

‘‘அழிக்கப்பட்ட நலவாரிய உறுப்பினர்களின் தகவல்கள் படிப்படியாக சேகரித்து சேர்க்கப்படும்” என்று நலவாரிய அதிகாரிகள் சிஐடியு தலைவர்களிடம் உறுதி அளித்தனர்.

தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கீழ் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 30 லட்சம் பேரும், உடல் உழைப்பு, Theni local News, Theni native News,Theni latest News,Theni News Today, என 17 நலவாரியங்களின் கீழ், மொத்தம் 33 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நல வாரியங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஓய்வூதியமும் பெற்று வருகின்றனர். கல்வி, திருமணம், மகப்பேறு உதவி கேட்டும், ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரண நிதி, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பணப்பயன்களை கோரியும், புதிய பதிவு, புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட பதிவுகளுக்காகவும் சுமார் 5 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வாரிய உறுப்பி னர்கள் 70 லட்சம் பேரின் தரவு களும், ஆவணங்களும் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சிஐடியு சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் செவ்வாயன்று (ஜன.30) சென்னையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நலவாரிய ஆன்லைன் பதிவுகள் காணாமல் போனது எப்படி? இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியா? என விசாரணை நடத்த வேண்டும்.

தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பலன்களை வழங்க காலதாமதம் செய்யக் கூடாது என போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் எஸ். கண்ணன், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம். தயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். இதனைத் தொடர்ந்து தொழிலாளர் துறை அதிகாரிகளை சந்தித்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி, மாவட்ட செயலாளர்கள் பா.பாலகிருஷ்ணன் (தென் சென்னை), சி. திருவேட்டை (மத்திய சென்னை), சு. லெனின்சுந்தர் (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.

பின்னர் தொழிலாளர்களிடையே பேசிய ஜி.சுகுமாரன், “ஓய்வூதியம் பெறுவோருக்கு அது தொடர்ந்து வழங்கப்படும். கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பணப்பயன் கோரும் விண்ணப்பங்களில், ஒப்புதல் கொடுத்துள்ளவர்களுக்கு வந்து விடும். தரவுகள் இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் குரல் செய்தி அனுப்பி, ஆவணங்களை பெற்று பணப்பயன்கள் தரப்படும்.

புதிதாக ஓய்வூதியம் கோருபவர்கள் தேவையான ஆவணங்களை தர வேண்டும். உறுப்பினர் புதுப்பித்தலுக்கு கால அவகாசம் தரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும், தகவல்கள் காணாமல் போனது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு விசாரணைக்குழு அமைத்து, அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Tags:    

Similar News