115 அடிக்கும் கீழே சரிந்த பெரியாறு அணை நீர் மட்டம்

பெரியாறு அணை நீர் மட்டம் 115 அடிக்கும் கீழே வந்ததால், முதல் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.;

Update: 2023-07-02 07:37 GMT

பெரியாறு அணை பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீ்ர் திறக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய நாற்றாங்கால் விதைப்பு பணிகள் தொடங்கியது. தற்போது நாற்றங்கால் வளர்ந்து நெல் நாற்றுகள் நடவு பருவத்திற்கு வந்து விட்டன. பல இடங்களில் நாற்றுகள் முதிர்ந்த நாற்றுகளாக மாறி விட்டன.

ஆனால் பெரியாறு அணையில் மழை இல்லை. அணையின் நீர் மட்டம் இன்று மதியம் நிலவரப்படி 115 அடிக்கும் கீழே வந்து விட்டது. அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு 96 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது.

இதனால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதய நிலையில் அணையில் நாற்றங்கால் நடுவதற்கு தேவையான அளவு கூட தண்ணீர் இல்லை. அணைப்பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகளும் இல்லை. இதனால் அணை நீர் மட்டம் உயர்வதற்கான வழிமுறைகளும் தெரியவில்லை.

மழை பெய்யாததால், அணையில் உள்ள தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த வேண்டிய நிலை வந்தாலும் வரும். அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை உருவானால் நெல் நடவுப்பணிகள் பாதிக்கப்படும். நாற்றங்கால் தயாரித்து உழவுப்பணிகள் முடித்த விவசாயிகளுக்கு இந்த நஷ்டம் ஏற்படும் அபாயகரமான நிலை உருவாகி உள்ளது.

Tags:    

Similar News